ADDED : பிப் 24, 2024 06:35 AM

திருக்கனுார் : மணலிப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சேகர், பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி மற்றும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கான மாலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் சரஸ்வதி, சிவா, சசிகலா, சிவசங்கரி, விமலா, ரம்யாதேவி, வரலட்சுமி, பாமா, தமிழ்வேணி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.