ஆட்டோ நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
ஆட்டோ நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
ஆட்டோ நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 14, 2025 01:01 AM

புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி., புதுச்சேரி மாநில ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை அலுவலகத்தில் நடந்தது.
ஆட்டோ நலச்சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேதுசெல்வம் சங்கத்தின் மூலம் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். பொருளாளர் சந்தா, சிறப்பு நிதி, குடும்ப நிதி, வரவு செலவு தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில், ஆட்டோ சங்க துணை பொதுச் செயலாளர் அந்தோணி, துணைத் தலைவர்கள் பாளையத்தான், பிரகாஷ், நடனமூர்த்தி, ராமதாஸ், செயலாளர்கள் சதீஷ், ராஜி, சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சங்கத்தின் சார்பாக மறைந்த உலகநாதன், கவுசிக்ஹசரப், முத்து, பாக்கியநாதன், சிசுபாலன், ரவி ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் விதம் 60 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.