Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசியல் பிரமுகரை கொல்ல முயற்சி புதுச்சேரியில் பயங்கரம்

அரசியல் பிரமுகரை கொல்ல முயற்சி புதுச்சேரியில் பயங்கரம்

அரசியல் பிரமுகரை கொல்ல முயற்சி புதுச்சேரியில் பயங்கரம்

அரசியல் பிரமுகரை கொல்ல முயற்சி புதுச்சேரியில் பயங்கரம்

ADDED : செப் 07, 2025 05:57 AM


Google News
புதுச்சேரியில் தென்கிழக்கு திசையில் தற்போது ஆளும் கட்சி தரப்பு வசத்தில் உள்ள தொகுதியில், காங். கட்சி சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட மாஜி அமைச்சரின் உறவினர் ஒருவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் நகரப் பகுதியில் வசித்து வந்தாலும், தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு, சொந்த கட்சியிலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவரை அவரது வீட்டில் வைத்து தீர்த்து கட்ட, 10 ஆணடிற்கு முன் நடந்த மாஜி கவுன்சிலர் கொலை வழக்கில் உள்ள சிலர் திட்டம் தீட்டினர்.

இதனை மோப்பம் பிடித்த சிறப்பு அதிரடிப்படை போலீசார், கொலை முயற்சியை முறியடித்து, காங்., பிரமுகரை காப்பாற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்., பிரமுகர் வரும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இந்த கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us