/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நண்பரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்நண்பரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
நண்பரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
நண்பரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
நண்பரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்
ADDED : பிப் 06, 2024 04:18 AM
பாகூர், : கரிக்கலாம்பாக்கம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் பாலாஜி 37; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, தனது நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன், பாகூர் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அவ்வழியாக, கிருஷ்ணமூர்த்தியின் நண்பரான ரெட்டிச்சாவடி அடுத்த புதுமேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் தனது நண்பர் ராமமூர்த்தியுடன் சென்றார்.
பின்னர், 4 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது, பாலாஜி, பிரகாஷ் வைத்திருந்த சிகரெட்டை கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமமூர்த்தி அவரது நண்பர் பிரகாஷ் சேர்ந்து அருகில் கிடந்த பீர்பாட்டிலால், பாலாஜியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த பாலாஜி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில், ராமமூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.