/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நெட் சென்டர் உரிமையாளர் மீது தாக்குதல்நெட் சென்டர் உரிமையாளர் மீது தாக்குதல்
நெட் சென்டர் உரிமையாளர் மீது தாக்குதல்
நெட் சென்டர் உரிமையாளர் மீது தாக்குதல்
நெட் சென்டர் உரிமையாளர் மீது தாக்குதல்
ADDED : ஜன 10, 2024 11:06 PM
புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை சாலை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 45; வீட்டில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் 2:30 மணி அளவில் கோட்டகுப்பத்தைச் சேர்ந்த ஷேக் ஹாஜா என்பவர் தனது மகள் கல்வி உதவி தொகை பெறுவதற்கு ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வந்தார்.
அப்போது, சர்வர் பிரச்னை காரணமாக விண்ணப்பத்தை பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஷேக் ஹாஜா, விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கிவிட்டு, தப்பிச் சென்றார். விஜயகுமார் அளித்த புகாரின் பேரில், ேஷக் ஹாஜா மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.