/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆத்ம நிர்பர் பாரத் விளக்க பயிலரங்கம் ஆத்ம நிர்பர் பாரத் விளக்க பயிலரங்கம்
ஆத்ம நிர்பர் பாரத் விளக்க பயிலரங்கம்
ஆத்ம நிர்பர் பாரத் விளக்க பயிலரங்கம்
ஆத்ம நிர்பர் பாரத் விளக்க பயிலரங்கம்
ADDED : செப் 21, 2025 11:12 PM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில் ஆத்ம நிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) விளக்க மாநில பயிலரங்கம் நடந்தது.
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆத்ம நிர்பர் பாரத் அபியான் (சுயசார்பு இந்தியா இயக்கம்) வரும் 25ம் தேதி மறைந்த ஜனசங்க தலைவர் தீன்தயாள் உபாதியாயா பிறந்தநாளை முன்னிட்டு துவங்கப்பட உள்ளது.
அதில், மக்கள் அனைவரும் தேசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் தேசிய, மாநில, மாவட்ட, தொகுதி அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள முக்கிய பிரமுகர்களை அந்த இயக்கத்தின் துாதர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவலகத்தில் ஆத்ம நிர்பர் பாரத் (சுயசார்பு இந்தியா) விளக்க பயிலரங்கம் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
ஆந்திரா மாநில முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான புரந்தீஸ்வரி கலந்து கொண்டு மாநில பயிலரங்கத்தை துவக்கி வைத்து, சுயசார்பு இந்தியா இயக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.இதில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார், செல்வம் எம்.எல்.ஏ.,சேவை மாநில பொறுப்பாளர்கள் வெங்கடேசன், ஜெயலட்சுமி, மாநில பொறுப்பாளர்கள் சரவண குமார், ரவிச்சந்தர், கீதா, மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமிநாராயணன், ஊடகத் துறை அமைப்பாளர் நாகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.