Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உல்லாஸ் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வு

உல்லாஸ் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வு

உல்லாஸ் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வு

உல்லாஸ் திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வு

ADDED : மார் 24, 2025 04:23 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: உல்லாஸ் திட்டத்தின் கீழ் கல்வி பயின்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு நேற்று நடந்தது.

புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு, மாநில எழுத்தறிவு மையம் சார்பில் உல்லாஸ் திட்டம் துவங்கப்பட்டு, 91 கற்றல் மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்ட 1200 பேர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி பயின்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆறு மாதங்களாக கல்வி பயின்றவர்களுக்கான 'அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வு' நேற்று நடந்தது. புதுச்சேரியில் 64 தேர்வு மையங்களில், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடந்த தேர்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

​புதுச்சேரியில் முதல்முறையாக நடந்த இத்தேர்வினை கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷனி, உல்லாஸ் திட்ட நோடல் அலுவலர் சுகுணா சுகிர்த பாய் மற்றும் உல்லாஸ் திட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர்.

தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தின் மூலம் 'கற்றவர்' என்ற சான்றிதழ் வழங்கப்படும். அதன் மூலம் உயர்கல்வியைத் தொடரலாம்.வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள தேர்வுக்கு சேர்க்கை நடந்து வருகிறது. ஆகையால், திட்டத்தில் சேர அருகில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை அணுகவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us