/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணிகள் விறுவிறு; வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணிகள் விறுவிறு; வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணிகள் விறுவிறு; வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணிகள் விறுவிறு; வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணிகள் விறுவிறு; வரும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்
ADDED : ஜன 03, 2024 06:36 AM

புதுச்சேரி : அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசலை குறைக்க, நுாறடிச்சாலை மேம்பாலத்தில் இருந்து ஜான்பால் நகர் துவங்கி அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலம் வரை 4.5 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதில், 28 மீட்டர் அகலத்திற்கு செம்மண் கொட்டி நிரப்பி, 22 மீட்டர் அகலத்திற்கு தார் சாலை அமைக்கவும், சாலையின் குறுக்கே 7 இடங்களில் சிறிய வாய்க்கால் பாலம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக ரூ. 22 கோடி செலவில் புறவழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்து டெண்டர் விடப்பட்டது.மழை மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாக காரணங்களால், சாலை பணி துவங்கியும், அடிக்கடி நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது புறவழிச்சாலை அமைக்கும் பணி மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சாலைக்காக மண் கொட்டி நிரப்பும் பணி நடக்கிறது.
பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் கூறுகையில், 'அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலை பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால், புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் இந்திரா சிக்னல் முதல் அரும்பார்த்தபுரம் வரையிலான போக்குவரத்து பிரச்னைகள், விபத்துக்கள் குறையும்' என்றார்.