ADDED : செப் 21, 2025 12:01 AM

புதுச்சேரி : பாரதிதாசன் அறக்கட் டளை சார்பில் பாவேந்தர் கலை இலக்கிய விழா அருங் காட்சியகத்தில் நடந்தது.
அறக்கட்டளைத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். கலைமாமணி நமச்சிவாயம், ரமேஷ் பைரவி, பொய்யாது ஏகாம்பரம், கிருஷ்ணகுமார், மதன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மாணவர்களுக்கான பழமொழி சொல்லுங்கள், பரிசு வெல்லுங்கள் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாரதா கங்காதரன் கல்லுாரிப் பேராசிரியர்கள் தண்டபாணி, ஹேமமாலதி, மகரிஷி மணிபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சரசுவதி வைத்தியநாதன் வரவற்றார். கவிஞர் ராஜஸ்ரீ மகேஷ் நன்றி கூறினார்.