Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இலவச அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு

இலவச அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு

இலவச அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு

இலவச அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு

ADDED : ஜன 03, 2024 06:35 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின்இலவச அரிசிக்கு நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான பணம்நேரடி பண பரிமாற்றம் மூலம் இன்று முதல் குடும்ப தலைவிவங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மத்திய அரசின் அரிசிக்கான பணம்: புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இந்த அரிசிக்கு பதில் பணமாக வழங்கும் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு துவக்கப்பட்டது.

அதன்படி, ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ இலவச அரிசிக்கான பணம் என, மொத்த குடும்ப உறுப்பினர்களை கணக்கிட்டு மத்திய அரசு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வருகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்திற்கான பணம் நேற்று வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

மாநில அரசு அரிசிக்கான பணம்:மத்திய அரசு அரிசிக்கு பதில் பணம் வழங்குவது போல், மாநில அரசு சார்பில் சிவப்பு ரேஷன் கார்டுக்கு மாதம் ரூ. 600, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ. 300 அரிசிக்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் மொத்தம் 3.34லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது.இந்த ரேஷன் கார்டுகளுக்கு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான இலவச அரிசிக்கான பணம் இன்று 3ம் தேதி முதல் குடும்ப தலைவி வங்கி கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சிவப்பு ரேஷன் கார்டுக்கு 2 மாத அரிசிக்கான பணம் ரூ. 1200, மஞ்சள் ரேஷன் கார்டுக்கு ரூ. 600 வங்கியில் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 31.88 கோடி செலவாகும்.

இலவச வேட்டி சேலைக்கு பணம்:

மகளிர் மேம்பாட்டு துறை மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, வேட்டி சேலைக்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அட்டவணை, பழங்குடியினர், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து மீதமுள்ள 1.30 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு ஒரு நபர் கொண்ட ரேஷன் கார்டுக்கு ரூ. 500, இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட ரேஷன் கார்டுக்கு ரூ. 1000 பணம் வங்கி கணக்குகள் மூலம் நாளை 4ம் தேதி செலுத்தப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us