/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
அரியூர் ராமச்சந்திரா பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 19, 2025 06:25 AM

வில்லியனுார்: அரியூர் ஸ்ரீ ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 96 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் அனிதா மற்றும் மாதேஷ் ஆகியோர் 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்தனர். காயத்திரி மற்றும் அருண்குமார் ஆகியோர் 479 மதிப்பெண்கள், மாணவி சதுரியா 477 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
பள்ளியில் பாடவாரியாக 2 பேர் தமிழில் 97 மதிப்பெண்கள், 8 பேர் ஆங்கிலத்தில் 98 மதிப்பெண்கள், ஒருவர் கணிதத்தில் 99, இருவர் அறிவியலில்-98, சமூக அறிவியலில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு தாளாளர் சங்கரநாராயணன்இனிப்பு வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
பள்ளி நிர்வாகி ராம்பிரசாத் கூறுகையில், 'எங்கள் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து கிராம பகுதியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகிறது. வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள், ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி' என்றார்.