Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ADDED : மே 21, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில் 10, 11, மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி பவித்ரா பள்ளியளவில், 500க்கு 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். மாணவி இளமதி 484 இரண்டாம் இடம், மாணவி வைனவி 480 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

மேலும், பிளஸ் 2 பொதுத் தேர்வில், பள்ளி யளவில், மாணவி சரண்யா 600க்கு 540 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஹரிதா 529 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி திவ்யா 506 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு, பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி சேர்மன் ராமு மாணவர்களை பாராட்டி, நினைவு பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us