
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி காங்., பொறுப்பாளராக இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தட்டாஞ்சாவடி தாகூர் நகர், முதலாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. புதுச்சேரி இளைஞர் காங்., தலைவர், இவரை தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதி பொறுப்பாளராக, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., நியமித்துள்ளார்.