ADDED : ஜன 13, 2024 07:05 AM
புதுச்சேரி : புதுச்சேரி சட்டத்துறை செயலராக மாவட்டநீதிபதி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கவர்னர் தமிழிசை ஒப்புதல்படி, தமிழக மாவட்ட நீதிபதி டாக்டர் எல்.எஸ். சத்தியமூர்த்தி, புதுச்சேரி அரசின் சட்டத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை தலைமை செயலர் ராஜிவ் வர்மா நேற்று வெளியிட்டார்.