/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்புஎம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு ஆன்லைனில்... விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ம் தேதி கடைசி நாளாக அறிவிப்பு

எவ்வளவு சீட்டுகள்
நீட் அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் இன்னும் இறுதியாகவில்லை. இருப்பினும் 1,160 சீட்கள் உள்ளதாக சென்டாக் அறிவித்துள்ளது.
விண்ணப்பம் கட்டணம்
அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக,எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு,500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்
அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு புதுச்சேரி குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு புதுச்சேரி குடியுரிமை உள்ளவர்கள்., பிற மாநில மாணவர்கள், ஓ.சி.ஐ., பிரிவினர் விண்ணப்பிக்கலாம். தெலுங்கு, கிறிஸ்துவ சிறுபான்மையினர் மருத்துவ இடங்களுக்கு புதுச்சேரி குடியுரிமை உள்ள மாணவர்கள மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
உறுதிமொழி படிவம்
புதுச்சேரி குடியுரிமை உள்ள மாணவர்கள் 20 ரூபாய் இ.டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த படிவத்தில் முதல் நபராக பெற்றோர் பெயர், இரண்டாம் நபராக கன்வீனர், சென்டாக் இடம் பெற வேண்டும். பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும். இந்த உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையெழுத்து பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உதவிக்கு...
மாணவர் சேர்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு centacugneet@dhtepdy.edu.in என்ற இ-மெயில் முகவரியிலும் 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.