/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 22, 2025 03:23 AM
புதுச்சேரி: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் மாறன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ம் கல்வியாண்டிற்கான, ஓராண்டு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம், கடந்த 15ம் தேதி முதல் வழங்கப்பட்டுகிறது.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, ஓராண்டு கால முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி, வகுப்பானது இரண்டு பருவங்களை கொண்டது. இதில் சேருவதற்கு 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில், கூட்டுறவு மேலாண்மை, நிதி மேலாண்மை, நிர்வாகம், வங்கியல், கணக்கியல், தணிக்கை, கடன் மற்றும் கடன் சார்ந்த சங்கங்கள், கூட்டுறவு மற்றும் இதர சட்டங்கள், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடு அதன் நுட்பங்கள், திட்ட அறிக்கை தயார் செய்தல் ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தேர்ச்சி பெறும் மாணவர்ளுக்கு தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால், கூட்டுறவு மேலாண்மை பட்டய சான்றிதழ், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடு அதன் நுட்பங்கள் ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
நுாறு ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்களை, www.tncu.tn.gov.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க அடுத்த மாதம் 20ம் தேதி கடைசி நாளாகும்.
பயிற்சிக்கான கட்டணம், 20 ஆயிரத்து 750 ரூபாய் ஆகும். விண்ணப்பத்தில் சுய கையெழுத்திட்டு, கட்டண ரசீது நகல் இணைக்க வேண்டும். அதனுடன், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, கூட்டுறவு மேலாண்மை நிலையம், 62, சுய்ப்ரேன் வீதி புதுச்சேரி என்ற முகவரில், நேரிலோ அல்லது பதிவு தபால் மற்றும் கூரியர் மூலம் அனுப்பலாம். மேலும், 0413 2331408, 2220105 என்ற தொலைபேசி மூலம் தொடர் கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.