Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மொபைல் போன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மொபைல் போன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மொபைல் போன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மொபைல் போன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

மொபைல் போன் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : பிப் 06, 2024 06:17 AM


Google News
புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச மொபைல் போன் ரிப்பேர் மற்றும் சர்வீஸ் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு இலவசமாக மொபைல், ஸ்மார்ட் போன் ரிப்பேர் மற்றும் சர்வீஸ் பயிற்சி அளிக்க விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க வரும் 9ம் தேதி கடைசி நாளாகும். இதில், புதுச்சேரியை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

8ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 முதல் 45 வரை வயதுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். 30 நாட்கள் முழு நேரம் பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 90 சதவீதம் செய்முறை பயிற்சியில், சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

பயிற்சி வரும் 12ம் தேதி துவங்குகிறது.மேலும், முன்பதிவு செய்ய, 8870497520, 9043489659, 0413 2246500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.