/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : செப் 13, 2025 07:22 AM
புதுச்சேரி : காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், நிரப்பப்படாமல் உள்ள முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.
காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு நிறுவன இயக்குனர் கோச்சடை செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வியாண்டில் (2025-26) இந்நிறுவனத்தில் உள்ள முதுகலை பட்டப் படிப்புகளுக்கு அனைத்து சுற்று கலந்தாய்வுகளும் முடிந்துள்ளது.
நிரப்பப்படாமல் உள்ள எம்.ஏ., தமிழ், எம்.ஏ., பிரெஞ்சு, வரலாறு, பொருளாதாரம், எம்.எஸ்சி., புள்ளியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், மனையியல், கணினி அறிவியல், வேதியியல், இயற்பியல், எம்.டி.டி.எம்., சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை, எம்.காம்., (நிறுவன செயலாளர் பணி) ஆகிய முதுகலை பட்டப் படிப்புகளுக்கு தகுதியான, புதுச்சேரி மற்றும் பிற மாநில மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பிற்கு தகுதியுடையவர்கள், வரும் 15ம் தேதி, மாலை 4:00 மணிக்குள், சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 0413- 2251687 தொலை பேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.