Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூலை 05, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: வேளாண் தொழில் முனைவோர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் கணேஷ் செய்திக்குறிப்பு;

மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஹைதராபாத் மற்றும் நபார்டு வங்கி உதவியுடன் வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கான 45 நாள் இலவச வேளாண் தொழில் முனைவோர் பயிற்சி, தவளக்குப்பம் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அபிவிருத்தி மையத்தில் வரும் 10ம் தேதி துவங்குகிறது.

இதில் விவசாயம், கால்நடை, தோட்டக்கலை, வனஇயல், மீன்வளம், மூலிகைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சிகள், மேலும் நிர்வாக மேலாண்மை, வங்கி கடன் மற்றும் திட்டங்களுக்கான மானியங்கள் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு, வேளாண் பொறியியல், வனவியல், கால்நடை மருத்துவ படிப்பு, உயிர்த்தொழில் நுட்பவியல், விலங்கியல் மற்றும் வேதியல் முடித்த அறிவியல் பட்டதாரிகள், உணவு தொழில்நுட்பவியல் படித்தவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தங்குமிடம், உணவு இலவசம்.

தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி சான்றிதழ், ஆதார், வங்கி கணக்கு புத்தகம், அடையாள அட்டை, புகைப்படத்துடன் ஒருங்கிணைப்பாளர் சுற்றுச்சூழல் வேளாண் அபிவிருத்தி மையம் 82, லலிதா நகர், தவளக்குப்பம், புதுச்சேரி-605007 என்ற முகவரியிலும், 8098028659, 9442324204 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us