/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கைத்தறி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு கைத்தறி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கைத்தறி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கைத்தறி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கைத்தறி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 28, 2025 06:56 AM
புதுச்சேரி : கைத்தறி தொழில் நுட்ப பட்டய பயிற்சிக்கு, தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கூட்டுறவு (கைத்தறி) துணை பதிவாளர் சியாம்சுந்தர் செய்திக்குறிப்பு:
கைத்தறி தொழில் நுணுக்கங்களைப் பற்றி பயிற்றுவிப்பதற்காக, தமிழ்நாடு சேலம், ஆந்திர மாநிலம் வெங்கடகிரி மற்றும் கர்நாடக மாநிலம் கடாக்கில் உள்ள கைத்தறி தொழில் நுட்ப பயிற்சி நிலையங்களில், வரும் 16ம் தேதி முதல் மூன்று ஆண்டு பட்டயப் பயிற்சி (டிப்ளமோ) தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்புவோர், தட்டாஞ்சாவடியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், விண்ணப் பப்படிவம் பெற்று, தக்க சான்றுகளுடன் வரும் 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த மாணவர்கள் ஆறு பேரில், சேலம் பயிற்சி நிலையத்திற்கு இருவரும், வெங்கடகிரி பயிற்சி நிலையத்திற்கு இருவரும், கடாக் பயிற்சி நிலையத்திற்கு இருவரும் தேர்ந்தெடுக்கப் படுவர்.
பயிற்சி காலத்தின் போது ஆண்டிற்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும்.
குறைந்தபட்சம் 10ம் வகுப்பில், ஒரே அமர்கையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சராசரி மதிப்பெண் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு பாடமாக பயின்றிருப்பதுடன், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களிலும் சராசரி மதிப்பெண் 50 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள் சராசரி மதிப்பெண் 40 சதவீதம், கணிதம் மற்றும் அறி வியல் பாடத்தில் சராசரி மதிப்பெண் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.