/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்... எப்போது; மாணவர்கள், பெற்றோர் தவிப்பு மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்... எப்போது; மாணவர்கள், பெற்றோர் தவிப்பு
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்... எப்போது; மாணவர்கள், பெற்றோர் தவிப்பு
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்... எப்போது; மாணவர்கள், பெற்றோர் தவிப்பு
மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்... எப்போது; மாணவர்கள், பெற்றோர் தவிப்பு

தேர்ச்சி பட்டியல் எங்கே
புதுச்சேரி மாநிலத்தில், இந்தாண்டு நீட் தேர்வு எழுத 5,266 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில், 5,149 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 2,639 மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மத்திய அரசிடம் புதுச்சேரி சுகாதார துறை அணுகி இந்த தேர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும். இந்த தேர்ச்சி பட்டியலும் இன்னும் வெளியிடவில்லை.
தமிழகம் டாப்
அதே நேரத்தில், தமிழகம் மருத்துவ சேர்க்கை ஜெட் வேகத்தில் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பேச்சுவார்த்தையே இன்னும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பெரிய மாநிலமான தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு திட்டமிட்டு விண்ணப்பம் கொடுக்கும்போது, சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஏன் விண்ணப்பம் காலத்தோடு விநியோகம் செய்ய முடியவில்லை என்பதே பெற்றோர்களின் கேள்வியாக உள்ளது.
கடைசி நொடி
இந்தாண்டு மட்டும் அல்ல. கடந்த காலங்களிலும் இப்படி தான் புதுச்சேரியில் மாணவர் சேர்க்கை காலதாமதமாகவே நடந்தது. எல்லாம் கடைசி நொடி; கடைசி நிமிட முடிவுகள் தான். இத்தனைக்கும் இந்தாண்டு தமிழகத்தினை காட்டிலும் சென்டாக் தான் முந்திக்கொண்டு முன் கூட்டியே மாணவர் சேர்க்கை நடைமுறைகளை துவங்கியது. ஆனால், வழக்கம்போல் அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் பின் தங்கி விட்டது.