/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெத்தி செமினார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுபெத்தி செமினார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
பெத்தி செமினார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
பெத்தி செமினார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
பெத்தி செமினார் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 24, 2024 06:31 AM

புதுச்சேரி : மூலக்குளம் பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்தியாவில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் 43 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள். இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் மண் வளம் கெடுவதுடன், மனிதர்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. குப்பையில் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகளின் உடல் நலன் பாதித்து உயிரிழக்கின்றது.
எனவே, பொதுமக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மூலக்குளம் பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் பள்ளியில் பயிலும் 6, 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலத்தை பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் எம்.ஜி.ஆர். நகர் ஆர்ச், குண்டு சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்போம் என மாணவர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.
'குளு குளு குல்பி'
விழிப்புணர்வு ஊர்வலம் முடிந்ததும் மாணவர்களுக்கு, கோடை வெயிலை குளிர்ச்சியாகும் வகையில், ருசி குல்பி, கோன் ஐஸ்கீரீம்கள் வழங்கப்பட்டது. மாணவர்கள் ருசி குல்பி, ஐஸ்கிரீம்களை ருசித்து சாப்பிட்டு, பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜிக்கு நன்றி தெரிவித்தனர்.