ADDED : ஜன 06, 2024 05:04 AM

பாகூர், : கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'போதை பொருள் ஒழிப்பு' கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஆசிரியர் மாலதி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் கருணாகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் 'போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் குறித்தும், சட்ட ரீதியாக எதிர் கொள்ளும் பிரச்னைகள், போதை பொருட்களை பயன்படுத்துவோர் மீதான சமுதாயத்தின் பார்வை குறித்து விளக்கினார்.
தலைமையாசிரியர் சக்திவாணி வாழ்த்தி பேசினர். தமிழாசிரியர் பெரியநாயகி தொகுப்புரையாற்றினார். பொருளாதார விரிவுரையாளர் சசிக்குமார் நன்றி கூறினார்.