/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு முகாம்உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு முகாம்
உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு முகாம்
உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு முகாம்
உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு முகாம்
ADDED : பிப் 25, 2024 04:07 AM

புதுச்சேரி, : உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான ஆண்டு கணக்கெடுப்பு முகாம் நடந்தது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், தேசிய புள்ளியியல் அலுவலக கள செயல்பாடு பிரிவு மூலம் தேர்வு செய்யப்பட்ட உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான ஆண்டு கணக் கெடுப்பை நடத்தி வருகிறது.
இதையொட்டி, நேற்று 2022-23ம் ஆண்டிற்கான கணக்கெடுப்புத் தொகுப்பு முகாம் முருங்கம்பாக்கத்தில் உள்ள துறை அலுவலகத்தில் நடந்தது. உதவி இயக்குனர் பாலாஜி வரவேற்றார். தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் துணை இயக்குனர் சந்திரசேகர் முகாமை துவங்கி வைத்து பேசினார்.
உற்பத்தி தொழிற்சாலைகளின் ஆண்டு கணக்கெடுப்பின் நோக்கம், முக்கியத்துவம், வழிமுறைகள் மற்றும் தொழிற்சாலைகளை தேர்ந்தெடுக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.
மேலும் தொழிற்சாலைகளின் ஆண்டு ஆய்வு படிவங்களை சுயமாக தொகுப்பது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.