/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாட்டிலைட் போனுடன் சிக்கிய அமெரிக்க டாக்டர் சாட்டிலைட் போனுடன் சிக்கிய அமெரிக்க டாக்டர்
சாட்டிலைட் போனுடன் சிக்கிய அமெரிக்க டாக்டர்
சாட்டிலைட் போனுடன் சிக்கிய அமெரிக்க டாக்டர்
சாட்டிலைட் போனுடன் சிக்கிய அமெரிக்க டாக்டர்
ADDED : மே 20, 2025 01:26 AM

புதுச்சேரி : புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு ஹைதராபாதிற்கு, 'இண்டிகோ' விமானம் புறப்பட்டது.
அப்போது, அமெரிக்காவை சேர்ந்த கண் டாக்டர் ரேச்சல் அன்னி ஸ்காட், 33, என்ற பயணி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட, அமெரிக்க அரசு உருவாக்கிய 'இரிடியம் 9575' என் சாட்டிலைட் போன் வைத்திருந்தது கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
லாஸ்பேட்டை போலீசார், அமெரிக்க பயணியிடம் விசாரித்து, அவர் மீது வழக்கு பதிந்து, அவரது பாஸ்போர்ட் மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர்.
பெண் டாக்டர் சந்தித்த புதுச்சேரி, தவளக்குப்பத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வெங்கடேசனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரி களும், சாட்டிலைட் போன் வைத்திருந்தது குறித்த விசாரணையை துவக்கியுள்ளனர்.