ADDED : ஜன 28, 2024 04:41 AM

புதுச்சேரி : புதுச்சேரி, லாஸ்பேட்டை புனித சூசையப்பர் குளுனி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவியர் சங்கக் கூட்டம் நடந்தது.
பள்ளி முதல்வர் ரோசிலி தலைமை தாங்கினார். ஆசிரியர் ப்ரபிதா வரவேற்றார். குளுனி இல்லத்தலைவி செலின், துணை முதல்வர் பான்சி, இந்திரா காந்தி மகப்பேறு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் சுஜிந்தரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவிகள் தங்கள் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து முன்னாள் மாணவிகளின் பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. தங்கள் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவிகள் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து, 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற முன்னாள் மாணவிகளுக்குப் பள்ளி நிர்வாகம் சார்பில், நினைவுப்பரிசு, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினர். முன்னாள் மாணவி ஷமிதா நன்றி கூறினார்.