/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் விழிப்புணர்வு பேரணிஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் விழிப்புணர்வு பேரணி
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் விழிப்புணர்வு பேரணி
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் விழிப்புணர்வு பேரணி
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 13, 2024 07:02 AM

வில்லியனுார் : புதுச்சேரி இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி அனைத் திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் புதுச்சேரி மாநில குழு சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கைது செய்யவேண்டும். கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கு அரசியல்வாதிகள் துணை போகக்கூடாது என நேற்று முன்தினம் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே துவங்கிய பேரணியை இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்திந்திய பெருமன்ற மாநில நிர்வாகிகள் முருகன், முரளி, உதயராஜ், உமாசங்கரி, அகல்யா சிவராமகிருஷ்ணன், எரிக்ரம்போ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வில்லியனுாரில் துவங்கிய பேரணி அரும்பார்த்தபுரம் வழியாக புதுச்சேரி ஏ.எப்.டி., மைதானத்தில் முடிந்தது. மாநில செயலாளர் எழிலன் ஒருங்கிணைத்து பேரணியை வழி நடத்தினார். இ.கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் அந்தோணி பேரணியை முடித்து வைத்தார்.