/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.பி., மீது பெண் எஸ்.ஐ., பாலியல் புகார் நீதிபதி தலைமையில் விசாரிக்க அ.தி.மு.க., வலியுறுத்தல் எஸ்.பி., மீது பெண் எஸ்.ஐ., பாலியல் புகார் நீதிபதி தலைமையில் விசாரிக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
எஸ்.பி., மீது பெண் எஸ்.ஐ., பாலியல் புகார் நீதிபதி தலைமையில் விசாரிக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
எஸ்.பி., மீது பெண் எஸ்.ஐ., பாலியல் புகார் நீதிபதி தலைமையில் விசாரிக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
எஸ்.பி., மீது பெண் எஸ்.ஐ., பாலியல் புகார் நீதிபதி தலைமையில் விசாரிக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
ADDED : ஜூலை 04, 2025 02:21 AM
புதுச்சேரி: எஸ்.பி., மீது பெண் எஸ்.ஐ., அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரை, நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் சமீபகாலமாக நடைபெற்று வரும் தவறுகள், அத்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மெல்ல இழந்து வருகிறது. மேற்கு பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் அதிகாரிகள் தனி ராஜ்ஜியம் நடத்துகின்றனர்.
பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு உயரதிகாரிகளால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பெண் எஸ்.ஐ., ஒருவர் கடந்த மே 15ம் தேதி, உயர் அதிகாரி ஒருவர், பாலியல் தொல்லை கொடுப்பதாக புகாரளித்துள்ளார்.
அந்த எஸ்.ஐ., கடந்தாண்டு காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க ரூ.5,000 லஞ்சம் வாங்கியது தொடர்பாக துறை ரீதியான விசாரணை முடிந்து ஓராண்டுக்கு பிறகு, தற்போது அவர் மீதும், லஞ்ச பணத்தை திருப்பி கொடுத்ததாக அவரது கணவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இது, உயரதிகாரி மீது பாலியல் புகார் கூறிய பெண் எஸ்.ஐ.,யையும், அதிகாரியை எச்சரித்த பெண் எஸ்.ஐ., கணவரையும் பழிவாங்கும் நோக்கில் லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதிகாரி மீது பெண் எஸ்.ஐ., கொடுத்த பாலியல் துன்புறத்தல் புகார் மீது துறை ரீதியான விசாரணை நேர்மையான முறையில் நடைபெறுமா என சந்தேகம் உள்ளது. இப்புகார் குறித்து, பெண் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்திட முதல்வர் உத்தரவிடவேண்டும்' என்றார்.