/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
அடிப்படை வசதிகளை வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் சாலை மறியல்
ADDED : ஜன 05, 2024 06:39 AM

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி, தொகுதி எம்.எல்.ஏ., சம்பத்தை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
முதலியார்பேட்டை தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னை, குண்டும் குழியுமான சாலைகள், தொடர் மின்வெட்டு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, மரப்பாலம் சிக்னலில், அ.தி.மு.க., சார்பில், நேற்று காலை 10:00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வினரும், தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விரைந்து வந்து முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொகுதியில் நிலவும் பிரச்னைகளை பாஸ்கர் பட்டியலிட்டார்.
சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட தொகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று, 10:30 மணியளவில் மறியலை கைவிட்டனர்.
போராட்டத்தால் புதுச்சேரி - கடலுார் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.