/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதித்யா பாரதிதாசன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ஆதித்யா பாரதிதாசன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
ஆதித்யா பாரதிதாசன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
ஆதித்யா பாரதிதாசன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
ஆதித்யா பாரதிதாசன் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 10, 2025 01:26 AM
புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் முத்திரையர்பாளையம் ஆதித்யாவின் பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொது தேர்வு மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி அளவில் மாணவி ஸ்ரீசுஹாஷினி 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், மாணவி ஸ்ரீநிதி 578, மாணவி பிரியான்சு குமாரி 566 மதிப்பெண்கள் பெற்று 2 மற்றும் 3ம் இடத்தை பெற்றுள்ளனர்.
மாணவி ஸ்ரீசுஹாஷினி புதுச்சேரி மாநில அளவில் தமிழ் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். கணிப்பொறி அறிவியலில் 5 பேர், கணிப்பொறி பயன்பாட்டில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக முதல் மதிப்பெண்ணாக, தமிழில் 100, பிரெஞ்சு-99, ஆங்கிலம்-98, இயற்பியல்-95, வேதியியல்-96, விலங்கியல்-98, தாவரவியல்-95, கணினி அறிவியல்-100, கணினி பயன்பாடுகள்-100, கணிதவியல்-99, கணக்கப் பதிவியல்-98, வணிகவியல்-99, பொருளியல்-99 பெற்றதோடு, 48 மாணவர்கள் உயர் சிறப்பு வகுப்பிலும், தேர்வ எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றனர்.
பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளை ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். பள்ளி முதல்வர், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தினர்.
ஆதித்யா கல்வி குழுமத்தில் அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவம், பொறியியல் நுழைவு தேர்விற்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நடத்தப்பட்டு வருகிறது.