ADDED : ஜன 03, 2024 12:26 AM

பாகூர் : பாகூர் பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வம் 35; தனியார் நிறுவன ஊழியர். இவர் வீட்டில் புறாக்கள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் புறாக்களுக்கு உணவு அளிக்க சென்ற போது, கூண்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து சீறியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாகூரில் உள்ள பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் மணி என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த மணி, புறாக்கூண்டில் இருந்த 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பினை மீட்டு பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.