/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலி: 2 பேர் காயம் நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலி: 2 பேர் காயம்
நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலி: 2 பேர் காயம்
நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலி: 2 பேர் காயம்
நடைபயிற்சி சென்றவர் கார் மோதி பலி: 2 பேர் காயம்
ADDED : ஜன 08, 2025 05:07 AM

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் மீது கார் மோதியதில் அமைச்சரின் ஆதரவாளர் இறந்தார்; 2 பேர் படுகாயமடைந்தார்.
புதுச்சேரி, அரியூர் பாரதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன்,52; என்.ஆர்.காங்., பிரமுகரான இவர், அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் ஆதரவாளர். துணிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை, வேல்முருகன், அரியூர் தாமரை நகர் இளங்கோவன், 45; அரியூர் காலனி பலராமன்,55; நவமால் காப்பேர் காயத்ரி நகர் இமானுவேல்,48; ஆகிய 4 பேரும் நான்கு வழிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பள்ளித்தென்னல் அருகே சென்றபோது, பின்னால் வந்த ஹூண்டாய் வெர்னா கார் இவர்கள் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி நின்றது.
இந்த விபத்தில் வேல்முருகன், பலராமன், காரைக்கால் திருநள்ளாரைச் சேர்ந்த கார் டிரைவர் மாணிக்கம், 38; ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு வேல்முருகன் இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் இறந்த முரளிக்கு, ரேவதி 45; என்ற மனைவியும், பிரசாத், 22; விஷ்வா, 20; என்ற இரு மகன்கள் உள்ளனர்.