ADDED : மார் 18, 2025 11:06 PM
புதுச்சேரி : குடிபோதையில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி டி.நகர் போலீஸ் ஏட்டு முத்தையன் மற்றும் போலீசார் காமராஜர் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு, குடிபோதையில் சேலத்தை சேர்ந்த பெரியசாமி, 46; மதுரையை சேர்ந்த சத்தியராஜ், 38; சென்னையை சேர்ந்த பெருமாள், 38; கோவிந்தராஜ், 27; விழுப்புரத்தை சேர்ந்த அய்யப்பன், 31; திருவண்ணாமலையை சேர்ந்த பார்த்திபன், 30; தட்சிணாமூர்த்தி, 31; புதுக்கோட்டையை சேர்ந்த பழனிவேல், 41; கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த சஞ்சய், 22; ஆகியோர் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார், 9 பேரையும் கைது செய்தனர்.