ADDED : ஜன 31, 2024 02:29 AM
புதுச்சேரி : புதுச்சேரியை சேர்ந்த சவுந்தரியிடம் ஆன்லைன் மூலம் சேலை வாங்கி அதிக லாபத்தில் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் தெரிவித்தார். அதை நம்பி அவர், 3.85 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமார்ந்தார்.
அதே போல், திரிபுரசுந்தரி என்ற பெண் மொத்தமாக சேலைகள் வாங்குவதற்கு 3,500 ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பி ஏமார்ந்தார். மேலும், ரவீன்ராஜ் என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து 21 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
ரங்கன் என்பவரிடம் குறைந்த அளவில் பட்டாசு வாங்கி அதிக அளவில் விற்கலாம் என, மர்ம நபர் கூறியதை நம்பி அவர், 4,000 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமார்ந்தார். ஐயப்பன் என்பவரிடம், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என மர்ம நபர் கூறியதை அடுத்து, அவர் 20 ஆயிரம் ரபாய் அனுப்பி ஏமார்ந்தார்.
காரைக்கால் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 2,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த முத்துசெல்வம் என்பவருக்கு மர்ம நபர் வாட்ஸ் ஆப்பில் லிங்கை அனுப்பினார். அந்த லிங்கில், ஓ.டி.பி., எண்ணை செலுத்தி, கிளிக் செய்த அடுத்த நிமிடத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 29 ஆயிரத்து 500 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. ஏழு பேர் மொத்தம் 4.65 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர். இது குறித்த சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.