ADDED : அக் 01, 2025 07:20 AM

புதுச்சேரி : நெல்லித்தோப்பை சேர்ந்தவர் விக்கி (எ) விக் னேஷ், 27; பா.ஜ.,வை சேர்ந்தவர் இவர் மீது கொலை வழக்கு உள்ளது.
நேற்று முன்தினம் பூமியான்பேட்டையில் நடந்த துக்க நிகழ்ச்சியில், கவிக்குயில் நகரை சேர்ந்த பிரசாந்த்க்கும் விக்கிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விக்கியை சமாதானம் பேச பிரசாந்த் அழைத்தார்.
அதன்பேரில் தனது நண்பருடன் சென்ற விக்கி பிரசாந்த் உள்ளிட்டோரால் வெட்டி கொலை செய்யப் பட்டார். உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிந்து, பிரசாந்த், அவரது கூட்டாளிகளான சின்னமாடசாமி, சக்திகுரு, அசோக், ஆனந்த், சதீஷ், சுப்ரமணி ஆகிய 7 பேரை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.


