/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு 28 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க 68 கோடி ஒதுக்கீடுஇலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு 28 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க 68 கோடி ஒதுக்கீடு
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு 28 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க 68 கோடி ஒதுக்கீடு
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு 28 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க 68 கோடி ஒதுக்கீடு
இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு 28 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க 68 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜன 25, 2024 04:42 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கவர்னர், முதல்வர் மீண்டும் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி அரசு, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் மூலம் புதுச்சேரியில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் 2015ம் ஆண்டு துவக்கப்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது.
என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் மீண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கலின்போது அறிவித்தார்.
இதையடுத்து, இத்திட்டத்திற்கு பள்ளி கல்வித் துறை மீண்டும் செயல்வடிவம் கொடுத்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி ஒப்புதல் பெற்றது.
அதையடுத்து 2023-24ம் கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் துவக்க விழா, கதிர்காமம் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்தது.
விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், கல்வி அமைச்சர் நமச்சிவாயம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, கல்வி துறை செயலர் ஆஷிஷ் மாதோவ்ராவ் மோரே, பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதற்கட்டமாக நேற்று அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, கதிர்காமம், இந்திராகாந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்திரா நகர், அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, முத்தரையர் பாளையம் ஆகிய பள்ளி மாணவ, மாணவியருக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தில் 28 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க 68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.