Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலையில் 41வது நிறுவன தின விழா

புதுச்சேரி பல்கலையில் 41வது நிறுவன தின விழா

புதுச்சேரி பல்கலையில் 41வது நிறுவன தின விழா

புதுச்சேரி பல்கலையில் 41வது நிறுவன தின விழா

ADDED : அக் 17, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழ கத்தில் 41வது நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது.

பல்கலைக் கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு தலைமையில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அவர், பேசுகையில், 'பல்கலைக்கழகத்தை ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறைகளில் உலகளாவிய நிலைபெறும் வகை யில் மேம்படுத்திய சாதனை களுக்காக ஆசிரியர்கள், ஊழியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார்.

வளர்ந்த பாரதம், தேசிய இலக்கை விரைவாக செயல்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழிகாட்டுதலின் கீழ், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட விதம் குறித்தும், கடந்த ஐந்து கல்வியாண்டுகளுக்கான வரவிருக்கும் பட்டமளிப்பு விழாக்கள், உயர்கல்வியின் சர்வதேச மயமாக்கல் முயற்சிகள், பல்கலைக்கழகத்தின் தற்போதைய வளர்ச்சி நிலை குறித்து பேசினார்.

தொடர்ந்து, பல்கலைக்கழகத்தால் உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளுக்குள் அடங்கிய 28 புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்களை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் தரணிக்கரசு, கலாசார இயக்குநர் கிளெமென்ட், நிதி அதிகாரி லாசர், தேர்வு கட்டுப்பாட்டாளர் சதானந்தாஜி, நுாலகர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us