/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்பிற்கு 3வது சுற்று சீட் ஒதுக்கீடு வெளியீடு பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்பிற்கு 3வது சுற்று சீட் ஒதுக்கீடு வெளியீடு
பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்பிற்கு 3வது சுற்று சீட் ஒதுக்கீடு வெளியீடு
பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்பிற்கு 3வது சுற்று சீட் ஒதுக்கீடு வெளியீடு
பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்பிற்கு 3வது சுற்று சீட் ஒதுக்கீடு வெளியீடு
ADDED : செப் 10, 2025 08:24 AM
புதுச்சேரி : பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்புகளுக்கு 3வது சுற்று சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் ஷர்மா செய்திக்குறிப்பு:
பி.டெக்., லேட்டரல் என்ட்ரி படிப்புகளுக்கான 3வது சுற்று தற்காலிக சீட்டு ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் டேஷ்போர்டு உள்நுழைவு சான்றுகளை பயன்படுத்தி தங்களது சீட்டு ஒதுக்கீடு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து அசல் சான்றிதழ், கல்வி கட்டணம் மற்றும் சீட்டு ஒதுக்கீட்டு உத்தரவை சம்மந்தப்பட்ட கல்லுாரி முதல்வரிடம் சமர்ப்பித்து, நாளை (11ம் தேதி) மாலை 5:00 மணிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்.
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, சாதி சான்றிதழ் சமர்ப்பிக்காத மாணவர்கள் 11ம் தேதி மதியம் 3:00 மணிக்குள் தங்களது டேஷ்போர்டில் குறைகள் தீர்க்கும் இணைப்பு விருப்பத்தின் மூலம் தங்களது சான்றிதழ்களை சமர்ப்பித்த பிறகு சீட்டு ஒதுக்கீட்டு உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், டேஷ்போர்ட்டில் உள்நுழைவில் உள்ள குறைகள் விருப்பத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம். அல்லது 0413-2655570, 2655571 ஆகிய தொலைபேசி எண்களில் சென்டாக் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.