/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 30,971 பேர் பயன்மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 30,971 பேர் பயன்
மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 30,971 பேர் பயன்
மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 30,971 பேர் பயன்
மகளிர் உதவித்தொகை திட்டத்தில் 30,971 பேர் பயன்
ADDED : ஜன 03, 2024 06:37 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை திட்டத்தில் இதுவரை 30,971 பேர் தேர்வு செய்யப்பட்டு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் அரசின் எந்தவித உதவித்தொகையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் 30 தொகுதியிலும் இத்திட்டம், அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மூலம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பரிசீலித்து நிதி உதவிகள் குடும்ப தலைவி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் 1981 பயனாளிகள், திருபுவனை - 905, ஊசுடு - 1,711, மங்கலம் -2,729, வில்லியனுார் - 2,032, உழவர்கரை -846, கதிர்காமம் - 1,037, தட்டாஞ்சாவடி - 507, காமராஜர் நகர் - 397, லாஸ்பேட்டை - 608, காலாப்பட்டு - 1,535, முத்தியால்பேட்டை - 852, ராஜ்பவன் - 814, உப்பளம் - 615, உருளையன்பேட்டை - 390, நெல்லித்தோப்பு - 777, முதலியார்பேட்டை - 805, அரியாங்குப்பம் - 1,984, மணவெளி - 2,051, ஏம்பலம் - 1,866, நெட்டபாக்கம் 1,557, நெடுங்காடு - 1,460, திருநள்ளார் - 1,174, காரைக்கால் வடக்கு - 1,077, காரைக்கால் தெற்கு - 877, திருப்பட்டினம் - 1,401, ஏனாமில் - 964 பயனாளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
மாகியில் இதுவரை ஒருவர் கூட இத்திட்டத்தில் பயன்பெற வில்லை என்பது குறிப்பிடதக்கது. பல தொகுதிகளில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அரசின் அனுமதிக்காக நிலுவையில் உள்ளன. விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள https://wcdservices.py.gov.in/ என்ற இணையதளம் சென்று சரிபார்த்து கொள்ளலாம்.
மேலும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.