Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது

கத்தியை காட்டி மிரட்டி ரகளை; புதுச்சேரியில் 3 வாலிபர்கள் கைது

ADDED : மே 31, 2025 05:11 AM


Google News
புதுச்சேரி : அரசு பள்ளி அருகே பொதுமக்களை கத்தி காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி அருகே 3 பேர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் புல்லட்டில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், கொசப்பாளையத்தை சேர்ந்த ரிஷி (எ) ரிஷிகுமார், 25; கடலுார், பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரிதிவிராஜன், 25; இடையார்பாளையம், என்.ஆர். நகர் தமிழசன், 25; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 கத்தி, 2 மொபைல், புல்லட் பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us