ADDED : ஜன 28, 2024 04:45 AM

புதுச்சேரி, : புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது தப்பியோட முயன்ற மூவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். 380 கிராம் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாக மாற்றி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் உப்பளம் நேதாஜி நகர், வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த தவசி, 22; வாணரப்பேட்டை ராஜராஜன் வீதியைச் சேர்ந்த பூபதி, 29; வானுார் காசிப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த செல்வம், 24; என தெரிந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.