ADDED : ஜூன் 08, 2025 10:15 PM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில் தேனீக்கள் கொட்டியதால், காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
அரியாங்குப்பம் புறவழிச்சாலை சிக்னல் அருகே மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. நீர்தேக்க தொட்டி அடிப்பகுதியில், தேனீக்கள் கூடு கட்டி உள்ளன. நேற்று காலை 7:00 மணியளவில், அப்பகுதியில் புகை மூட்டம் காணப்பட்டது. அங்கிருந்து தேனீக்கள் பறந்து வந்து அவ்வழியாக சென்ற 20க்கும் மேற்பட்டவர்களை கொட்டியது.
தேனீக்கள் கொட்டி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அனைவரும் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனீக்கள் கூடு கட்டி உள்ள இடம் அருகே பள்ளி மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளது. பொதுமக்களின் முக்கிய சாலையாக இருப்பதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தேனீக்கள் கூட்டை முற்றிலுமாக அகற்ற தீயணைப்பு துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.