/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய 20 பேர் கைது எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய 20 பேர் கைது
எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய 20 பேர் கைது
எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய 20 பேர் கைது
எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய 20 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2025 06:49 AM

புதுச்சேரி; விசாரணையில் பெண்களை துன்புறுத்திய தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி., அலுவலகம் முன், மலர் வளையம் வைத்து, போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
தவளக்குப்பம் அருகே தனியார் ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணியின் நகைகள் கடந்த மாதம் காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டலில் வேலை பார்த்த 5 பெண்களை அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணை என்ற பெயரில், பெண்களை துன்புறுத்திய சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவளக்குப்பத்தில், வி.சி., கம்யூ., கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா, 2 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த பெண் காவலர் ஆகியோரை இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட, சப் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய கோரி, சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று காலை 11:00 மணியளவில், டி.ஜி.பி., அலுவலகம் முன், மலர் வளையம் வைத்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுப்பட்ட 20 பேரை, பெரியக்கடை போலீசார் கைது செய்தனர். பின், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.