/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மருத்துவ மாணவி உட்பட 2 பேரிடம் ரூ. 11 லட்சம் மோசடிமருத்துவ மாணவி உட்பட 2 பேரிடம் ரூ. 11 லட்சம் மோசடி
மருத்துவ மாணவி உட்பட 2 பேரிடம் ரூ. 11 லட்சம் மோசடி
மருத்துவ மாணவி உட்பட 2 பேரிடம் ரூ. 11 லட்சம் மோசடி
மருத்துவ மாணவி உட்பட 2 பேரிடம் ரூ. 11 லட்சம் மோசடி
ADDED : ஜன 04, 2024 03:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ மாணவி உட்பட இரு பெண்களிடம் 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லுாரி மாணவிராகவி 23;ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளதாக இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி, அதில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டார்.
மர்ம நபர் ஒரு லிங்க் அனுப்பி மொபைல் அப்ளிகேஷன் டவுன்லோடு செய்து பதிவு செய்ய கூறியுள்ளார். அப்ளிகேஷன் டவுன்லோடு செய்து பதிவு செய்து, முதலில் ரூ.300 கட்டி டாஸ்க்கு முடித்தார்.
அவருக்கு ரூ. 538 கிடைத்தது. பின், பல முறை ரூ. 7.90 லட்சம் வரை செலுத்தி ஒவ்வொரு டாஸ்க்காக முடித்தார். அவர், ரூ. 11.53 லட்சம் சம்பாதித்ததாக ஆன்லைன் கணக்கில்காண்பித்தது. அந்த பணத்தை வங்கிக்கு மாற்ற முயன்றபோது கணக்கு முடக்கப்பட்டது.
லாஸ்பேட்டையைச்சேர்ந்தவர் திவ்யா, 31; தனியார் கம்பெனி அக்கவுண்டன்ட். இவரைவாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்ட பெண், வீட்டில் இருந்து மொபைல்போன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். தாங்கள் அனுப்பும் யூடியூப் லிங்க்கை திறந்து, லைக் கொடுத்தால் சம்பளம் வழங்கப்படும் என, தெரிவித்தார்.
அதன்படி, அவர், அனுப்பிய லிங்கை ஒப்பன் செய்து யூடியூப் சேனல்களுக்கு திவ்யா லைக் கொடுத்தார். முதலில் ரூ. 150 கிடைத்தது. பின், பணம் செலுத்தி டாஸ்க்குள் முடித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி திவ்யா பல தவணைகளில் ரூ. 3.09 லட்சம் செலுத்தி டாஸ்க்குகளை முடித்தார். பணத்தை எடுக்க மேலும் ரூ. 46 ஆயிரம் செலுத்த மர்ம நபர் வலியுறுத்தினார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.இரு புகார்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.