/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மியாட் மருத்துவமனை சார்பில் 2 நாள் எலும்பு நோய் சிறப்பு முகாம் மியாட் மருத்துவமனை சார்பில் 2 நாள் எலும்பு நோய் சிறப்பு முகாம்
மியாட் மருத்துவமனை சார்பில் 2 நாள் எலும்பு நோய் சிறப்பு முகாம்
மியாட் மருத்துவமனை சார்பில் 2 நாள் எலும்பு நோய் சிறப்பு முகாம்
மியாட் மருத்துவமனை சார்பில் 2 நாள் எலும்பு நோய் சிறப்பு முகாம்
ADDED : செப் 11, 2025 03:18 AM
புதுச்சேரி: சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை சார்பில், எலும்பு பிரச்னைகளுக்கான சிறப்பு முகாம், நாளை மற்றும் நாளை மறுநாள், இரண்டு நாட்கள்நடக்கிறது.
சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் கடந்த 40 ஆண்டுகளாக எலும்பு பிரச்னைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முதுகெலும்பு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவமனை சார்பில், எலும்பு பிரச்னைகளுக்கான சிறப்பு முகாம், புதுச்சேரி நுாறடி சாலை, முதலியார்பேட்டை, சுகன்யா கன்வென்ஷன் சென்டரில், நாளை (12ம் தேதி) மற்றும் (13ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.
முகாமில், எலும்பு அமைப்பு குறைபாடுகள் (குழந்தைகள் மற்றும் விபத்து ஏற்பட்டவர்களுக்கு) மூட்டு மாற்று அறுவை சிகிச்சை (தோள்பட்டை, முழங்கை) முதுகெலும்பு கோளாறுகள், விளையாட்டு மருத்துவம், சிதைவு எலும்பு நோய்கள், எலும்பு தொடர்பான கட்டிகள் ஆகிய பிரச்னைகளுக்கு, சிறப்பு மருத்துவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும், 7824060012, 7708068218 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, அவசியம் முன்பதிவு செய்ய வேண்டும்.