/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 2 பேர் கைது 160 கிராம் பறிமுதல் கஞ்சா விற்ற 2 பேர் கைது 160 கிராம் பறிமுதல்
கஞ்சா விற்ற 2 பேர் கைது 160 கிராம் பறிமுதல்
கஞ்சா விற்ற 2 பேர் கைது 160 கிராம் பறிமுதல்
கஞ்சா விற்ற 2 பேர் கைது 160 கிராம் பறிமுதல்
ADDED : ஜூன் 08, 2025 10:47 PM
புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, 160 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை தனியார் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்கள், போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை விரட்டி பிடித்து போலீசார் விசாரித்தபோது, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சென்னை, அடையாளப்பட்டு, கம்பன் நகரைச் சேர்ந்த சுதாகரன் மகன் சூர்யா, 24; மேட்டுப்பாளையம், சாணரப்பேட், புதுநகரைச் சேர்ந்த பழனி மகன் நிரஞ்சன், 18; என்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 160 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 மொபைல் போன்கள், 1,000 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருவரையும் போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.