/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/3ம் நம்பர் லாட்டரி விற்ற 12 பேர் கைது3ம் நம்பர் லாட்டரி விற்ற 12 பேர் கைது
3ம் நம்பர் லாட்டரி விற்ற 12 பேர் கைது
3ம் நம்பர் லாட்டரி விற்ற 12 பேர் கைது
3ம் நம்பர் லாட்டரி விற்ற 12 பேர் கைது
ADDED : ஜன 25, 2024 04:12 AM
புதுச்சேரி, : புதுசாரம் பகுதியில் 3ம் நம்பர் லாட்டரி விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி புதுசாரம், நடு தெருவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்குரிய வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது 3ம் நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. லாட்டரி சீட்டு விற்பனை செய்த லாஸ்பேட்டை, ஓம் சக்தி நகர் சரவணன், 44; திலகர் நகர் இளங்கோ, 50; புதுசாரம் மிடில் வீதி, முருகன், 51; வெண்ணிலா நகர் மோகன், 43; சண்முகாபுரம், அணைக்கரை வீதி ராஜா, 28; குயவர்பாளையம் சுந்தரம் மேஸ்திரி வீதி சுந்தர், 44; தட்டாஞ்சாவடி, கருணாகரன் பிள்ளை வீதி பிரம்மநாதன், 53; கங்கையம்மன் கோவில் வீதி சிவராஜ், 53; குயவர்பாளையம் பாலு, 50; நாவற்குளம் சங்கர், 32; கொம்பாக்கம் பெருமாள், 72; கோவிந்த சாலை செல்வம், 40, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 48 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.