Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 6ம் தேதி 108 கன்னியா பூஜை

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 6ம் தேதி 108 கன்னியா பூஜை

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 6ம் தேதி 108 கன்னியா பூஜை

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 6ம் தேதி 108 கன்னியா பூஜை

ADDED : மார் 28, 2025 04:52 AM


Google News
புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் கும்பாபிேஷகம் விழாவையொட்டி, நடைபெறும் 108 கன்னியா பூஜையில் குழந்தைகள் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் மகா கும்பாபிேஷகம் விழா வரும் 7ம் தேதி காலை நடக்கிறது.

இதையொட்டி வரும் 6ம் தேதி காலை 9:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாள் 4ம் கால யாகசாலை பூஜையில் 108 கன்னியா பூஜை (பாலா பூஜை) நடக்கிறது. இந்த பூஜையில் விருப்பமுள்ள நபர்கள், தங்கள் குடும்பத்தில் ஒரு வயது முதல் 10 வயது வரை குழந்தைகள் கலந்து கொள்ள 9443250153, 9944016650 எண்ணில் தொடர்பு கொண்டு குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us