/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரதிதாசன் அருட்காட்சியத்தில் பயிலரங்கம் பாரதிதாசன் அருட்காட்சியத்தில் பயிலரங்கம்
பாரதிதாசன் அருட்காட்சியத்தில் பயிலரங்கம்
பாரதிதாசன் அருட்காட்சியத்தில் பயிலரங்கம்
பாரதிதாசன் அருட்காட்சியத்தில் பயிலரங்கம்
ADDED : ஜூலை 07, 2024 03:40 AM
புதுச்சேரி: புதுச்சேரி கலைப் பண்பாட்டுத் துறை மூலம், தமிழ் ஆர்வத்தை துாண்டும் வகையில் மாணவர்களுக்கு, பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
புதுச்சேரி பாரதிதாசன் நினைவு அருட்காட்சியம் ஆய்வு மையத்தில், இன்று 7ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, பாரதிதாசன் இலக்கியப் படைப்புகள் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடக்கிறது. தமிழஞர்கள், பேராசிரியர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது என, கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.