Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பெண்கள்

ADDED : ஜூன் 29, 2024 06:18 AM


Google News
நெட்டப்பாக்கம் : பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதியாததை கணடித்து காவல் நிலையத்தை நள்ளிரவில் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

நெட்டப்பாக்கம், அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ், 35. எம்.ஆர்.எப்., ஊழியர். இவர் நெட்டப்பாக்கம் பகுதியில் கறவை லோன் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக சமூக வலைதளத்தில் பதவிட்டிருந்தார். இதனால் நெட்டப்பாக்கம் நேரு நகரைச் சேர்ந்த கிருத்திகா உள்ளிட்ட 50 பேருக்கு கறவை மாடு லோன் வழங்காமல் மருத்துவ அதிகாரிகள் பாதியில் நிறுத்திவிட்டு சென்றனர்.

இதுகுறித்து கிருத்திகா மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீரா, சுதா, ராணி, கிருஷ்ணவேனி, கோமளா, லதா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் மாலை அம்மாப்பேட்டை வீட்டில் இருந்த ரமேஷிடம் இல்லாத விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் எங்களை போன்ற ஏழைகளுக்கு லோன் டோக்கன் போடமால் அதிகாரிகள் சென்று விட்டதாக கூறி, நியாயம் கேட்டனர். இதற்கு கிருத்திகா உள்ளிட்டவரை ரமேஷ் தாக்கி, அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து கிருத்திகா நெட்டப்பாக்கம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். புகாரை எடுக்க போலீசார் மறுக்கவே கிருத்திகாவிற்கு ஆதராவாக 30க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:45 மணியளவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரமேஷ் மீது நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us